சென்னை: அட்சயதிருதியை எதிரொலியாக இன்று மக்கள் பெருமளவில் தங்கம் வாங்க குவிந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரே நாளில் 3வது முறையாக விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்ந்தினாலும், நகை கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
இன்றைய அட்சய திருதியை யாராலும் மறக்க முடியாது. ஏன் தெரியுமா? வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 3 முறை நகை விலை உயர்ந்துள்ளது. காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் மாலையில் மாற்றம் இருக்காது என்று நினைத்த நிலையில், மாலையிலும் நகை விலை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.360 என இரண்டு முறை ரூ.720 உயர்ந்த தங்கம், மாலையிலும் ரூ.520 உயர்ந்துள்ளது.
அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று நினைத்த மக்கள் முன்டியடித்துக்கொண்டு நகை நடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். காலை 6 மணி முதல் நகை கடைகளும் திறந்திருந்த நிலையில், நகை வாங்குபவர்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் பரவலாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இன்று நகை விலை 3 முறை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது காலையில் இருந்த விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}