டெல்லி: இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளம் தரப்பட மாட்டாதாம். அதற்குப் பதில் போர்டு மீட்டிங், கமிட்டி மீட்டிங்குகளுக்கு வரும்போது அதற்கான செலவுத் தொகை மட்டுமே தரப்படுமாம்.
அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா (இருவரும் இரட்டையர்கள், வயது 31), இளைய மகன் ஆனந்த் (28 வயது) ஆகியோர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். தந்தை முகேஷ் அம்பானிக்கு தற்போது 66 வயதாகிறது. அவர் கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சம்பளம் வாங்குவதில்லை. இந்த நிலையில் தனது பிள்ளைகளுக்கும் சம்பளத்தை நிறுத்தி விட்டார் முகேஷ். இதுதொடர்பான தீர்மானமும் போடப்பட்டுள்ளது.
இதேபோலத்தான் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி போர்டு இயக்குநராக கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டபோதும் சம்பளம் இல்லாதவராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பீஸ் மட்டும்தான். அதேசமயம், கடந்த 2022-23 நிதியாண்டில் அவர் பீஸாக ரூ. 6 லட்சமும், கமிஷனாக ரூ. 2 கோடியும் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}