வரமாக வந்தவள் நீயடி!

Jul 09, 2026,01:02 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்

வானிலை
அறிக்கையில் கூட
அறிவிக்கவில்லையே
ஏன் இந்த
திடீர் மாற்றம்..!

வான் மேகங்கள்
பரவசமாக
பாய்ந்தோட...!
கண் கொள்ளாக்
கடல் கொந்தழிக்க...!

அலைமேல் அலை 
விடாது ஆர்ப்பரிக்க...!
சற்றே
சிந்தித்தேன்...!

ஆஹா
வியந்தேன்...!
என்ன அழகு
விக்கித்தேன்...!

என்னவளை
கண்டதால்
வந்த மாற்றங்களாயிது...!



அவளை நான்
நோக்க
வெட்கத்தில்
அவள் நிலம் நோக்க...!

கூந்தல் காற்றில்
அலைபாய
இருமலரின்
வாசம் நாசி தழுவிச்செல்ல...!

இதுவரை கண்டதில்லை
இப்படி ஓர்
அதிசயத்தை...!

அதனால் தானோ
இயற்கையும்
இதமாக  
இடம் மாறுகிறது...!

பொன்னும் வேண்டாம் 
மணியும் வேண்டாம்
உன் 
புன்னகைப் போதுமடி...!

என்னவள்
எனக்கானவள்
என்னுயிரானவள்
இதயத்தை
இதமாக தந்துவிட்டால்
உயிராய்
எனக்குள்
நுழைந்து விட்டாள்

தாய்போல் உன்னை
தாங்கிடுவேன்
தாரமாக வந்திடடி
தவப்பயனை
இருவரும்
சுகமாக வாழ்ந்திடலாம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்