டில்லி : திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில், திருப்பதி கோவிலுக்கு தாங்கள் நெய் சப்ளை செய்யவில்லை என விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது முதல் அது தான் நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இது உண்மை தான் என திருமலை திருப்பதி தேவஸ்தானமும் கூறி உள்ளது. இது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான இஓ தெரிவித்துள்ளார். அதோடு தரமில்லாத நெய் அனுப்பியதாக தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனத்தின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அமுல் நிறுவனமும் திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்ததாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அமுல் நிறுவனம் விளக்கம் அளித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாங்கள் ஒரு போதும் நெய் சப்ளை செய்தது கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அமுல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய் உச்சபட்ச தரமுடையது. ஐஎஸ்ஓ சான்று பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமுல் நெய் உயர்தரமான மாட்டுப்பாலில் இருந்து தயார் செய்யப்படுவதாகும். அந்த பால் எங்களின் சொந்த பண்ணைகளில் இருந்து தரம் பரிசோதிக்கப்பட்டு, அதற்கு பிறகே பெறப்படுகிறது. அமுல் நெய், இந்தியாவின் மிகவும் நம்பகமான நெய் பிராண்ட். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கை உள்ள பிராண்டாக இருந்து வருகிறது. தொடர்ந்து அந்த நம்பிக்கையை இந்திய மக்களுக்கு அளிக்கும் வகையில் எங்களின் உற்பத்தி இருக்கும்.
அமுல் நிறுவன மற்றும் அமுல் நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கும் எதிராக பகிரப்பட்டு வரும் தவறான விஷயங்களை நிறுத்துவதற்காக தான் இந்த பதிவு பகிரப்படுகிறது. ஒருவேளை இதில் யாருக்காவது எந்த சந்தேகமோ, கேள்வியோ இருந்தால் எங்களின் டோல் ஃப்ரீ எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அமுல் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}