ஆனந்த மகிந்திரா "பிளான்" இதுதானாம்.. ஓபனா சொல்லிட்டார்.. உங்க கமென்ட் என்ன?

Aug 29, 2023,12:01 PM IST
மும்பை: செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு தார் ஜீப் பரிசளிக்க திட்டமிட்டிருந்த மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தற்போது தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யூவி இவி  கார் பரிசளிக்க திட்டமிட்டுள்ளாராம்.

செஸ்  உலகின் புதிய மன்னராக பிரக்ஞானந்தா முடி சூட்டப்படு நேரம் வெகுவாக நெருங்கி விட்டது.  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜஸ்ட் மிஸ்ஸாக பட்டம் பறி போனாலும் கூட இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தி விட்டார் பிரக்ஞானந்தா.



அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டுள்ளன. விரைவில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை பிரக்ஞானந்தா படைப்பார் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், பிரக்ஞானந்தா குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

அந்த டிவீட்டில் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:

பிரக்ஞானந்தாவுக்கு தார் பரிசளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால் என்னிடம் இன்னொரு ஐடியா இருக்கிறது.

தங்களது பிள்ளைகளை செஸ்ஸில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக இருந்து, எல்லாவற்றையும் செய்துள்ள பெற்றோரை பாராட்ட , கெளரவிக்க நான் விரும்புகிறேன்.  இந்த பூமியின் சிறந்த எதிர்காலத்திற்கு இது சிறந்த முதலீடு. எலக்ட்ரிக் வாகனங்கள் போலத்தான் இதுவும். எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபுவுக்கு நான் எக்ஸ்யூவி 400 இவி வாகனத்தை பரிசளிக்க முடிவு  செய்துள்ளேன்.. உங்க கருத்து என்ன. என்று கேட்டுள்ளார் ஆனந்த் மகிந்திரா.

இது செமையான ஐடியா மற்றும் வியாபார உத்தியாக நமக்குத் தோன்றுகிறது.. உங்களுக்கு எப்படி தோணுது வாசகர்களே!

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்