- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 22 :
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தங்களை விட உயர்ந்த வீரர்கள் யாரும் கிடையாது என தங்களை பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த பூமியை ஆட்சி செய்யும் அரசர்கள் மிகவும் பணிவுடன் நீ பள்ள கொண்டிருக்கும் கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கம் கேட்பதற்காக காத்திருக்கும் பக்தர்களை போல் காத்து நிற்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் உன்னுடைய அருளை பெறுவதற்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், தாமரைப் பூ மெதுவாக தன்னுடைய இதழ்களை திறந்து மலர்வது போலவும், உன்னுடைய சிவந்த தாமரை போன்ற கண்ணகளை மெல்ல திறந்து எங்களை பார்க்க மாட்டாயா? சந்திரனும் சூரியனும் உதித்தது போல அந்த கண்களால் எங்களை நீ பார்த்தால் எங்களின் அனைத்து பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}