மீண்டார் பிரஷாந்த்.. அந்தகன் படம் சூப்பர்.. மேக்கிங் வேற லெவல்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Aug 09, 2024,05:56 PM IST

சென்னை:   டாப் ஸ்டார் பிரசாந்த்தின் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. கண் தெரியாதவராக நடித்துள்ள நடிகர் பிரசாந்தின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.




இதில்  பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் அந்தாதூன். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. குறிப்பாக இப்படம் 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது. இது பின்னர் மலையாளத்தில் ரீமேக் ஆனது. தற்போது தமிழில் அந்தகன் என்ற பெயரில் வந்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் மேளதாளத்துடன் வரவேற்று பாலாபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். தியேட்டர்களில் திருவிழாக் கோலம் காணப்பட்டது. இப்படத்தில் கண் தெரியாத பியானோ கலைஞராக நடித்துள்ளார் பிரஷாந்த். அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. படம் முழுக்க அவரது நடிப்பு, இசை, பாடல்கள், கதை, மேக்கிங் என எல்லாமே நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரெவ்யூக்கள் வர ஆரம்பித்துள்ளன.


அதேபோல ஆரம்பக் காட்சியை பார்த்தால் மட்டுமே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி புரியும். அதனால் படம் பார்ப்பவர்கள் படத்தின் முதல் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்கள். படத்தில் சின்ன வீடாக நடித்திருக்கும் சிம்ரனின் நடிப்பு வேற லெவல் என அந்தகன் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்