அமராவதி: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வீட்டில் இருந்தே இனி வேலை பார்க்கலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னர் எல்லாம் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது என்பது அரிதாகவே இருந்தது. அது எப்படி வீட்டில் இருந்தே வேலை பார்க்க முடியும் என்ற கேள்விகளும் எழுத்தான் செய்தன. இது கொரோனா காலத்திற்கு முன்னர் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐடி மற்றும் வங்கியில் பணிபுரிவோர்கள் அதிகளவில் வீட்டில் இருந்து தங்கள் பணிகளை செய்யத் தொடங்கினர். அப்போதுதான் work from home என்பது அனைத்து தரப்பு மக்களால் புரிந்து தொள்ளப்பட்டது.

இந்த முறை தற்பொழுது பரவலாக அநேக இடம்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திர முதல்வர் ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி ஆந்திராவில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இனி வேலை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆந்திர முதல்வர். பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஐடி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளை பாராட்டுகிறேன். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திர மாநிலம் முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் இருந்து செய்தால், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும். மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் கோ ஒர்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}