சென்னை: கூட்டணியில் இருப்பதற்காக நான் அடிமையாக முடியாது.. இது துப்பாக்கி பிடிச்ச கை.. நல்ல போலீஸ்காரனைப் பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரிதான் இருக்கும்.. 6 மணிக்கு மேல சிவி சண்முகம் எப்படி பேசுவார்னு எனக்குத் தெரியும்.. பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வீசிய அம்புகள் இவை!
அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று பலரும் சொல்வார்கள். காரணம், இருவருக்கும் இடையே இருக்கும் சில பொதுவான காரணங்கள். ஆனால் அந்த கூட்டணி தற்போது மனப்பூர்வமாக இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.
அதிமுக தலைமைக்கும், தமிழ்நாடு பாஜக தலைமைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நீரு பூத்த நெருப்பாக இது தகித்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே தயாராக இருக்கிறார்கள். இருவரும் மனம் ஒத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் 1 சதவீதம் கூட இல்லை.. இதுவே நிதர்சனம்.
இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையை கையில் எடுத்த பிறகு, அண்ணாமலை தலைவரான பிறகு அனைவரும் பார்த்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஆரம்பத்தில் பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் ஓ. பன்னீர் செல்வத்தைத் தாண்டி ஒற்றைத் தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தபோது அவருக்கு ஆதரவாக அண்ணாமலை நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். இதுதான் அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உரசல் ஏற்பட முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}