சென்னை: கரூர் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான். ஆனால் அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டால் அது நிற்காது. விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம். ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல தான். இது எல்லாம் சின்ன பிள்ளைகள் ஆடுகின்ற ஆட்டத்திற்கு சமம்.
இன்று அரசு உறுதியாக இருக்கிறது என்றால் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் யார் பர்மிஷன் வாங்கியது. அவர்கள் சரியாக வாங்கினார்களா இல்லையா? பர்மிஷன் கொடுத்த அதிகாரிகள் சரியாக கொடுத்துள்ளார்களா இல்லையா? என்று விசாரிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்தின் மீது தவறுகள் இருக்கு. அவர்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டும். அதற்காக விஜய் அவர்களை குற்றவாளியாக ஆக்க முடியாது. அதற்கு வாய்ப்போ இல்லை. சிலர் அரசியலுக்காக அதை பேசுகிறார்கள். தவெக நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசு,

திருமாவளவன் கட்சியில் இருந்து பலர் வேறு வேறு கட்சிகளுக்கு மாறுகின்றனர். அதனால் தான் திருமாவளவன் இவ்வாறு விஜய் மீது குறை கூறுகிறார். விஜய்யை பாஜகவினர் பாதுகாப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏன் என்றால் ஆளும் கட்சி பிறரை நசுக்கு வதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தவெக தலைவர்களை நசுக்கப்பார்கின்றனர். நடவடிக்கை எடுக்கலாம். நசுக்கக்கூடாது. அதற்கு தான் நாங்கள் குறல் கொடுக்கிறோம். திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று கூறுவதற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}