அமெரிக்காவில் சோகம்.. அடுத்தடுத்து விமான விபத்து.. குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!

Feb 01, 2025,12:48 PM IST
வாஷிங்டன்: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மோதி விபத்திற்கு உள்ளானதில் 67 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நடந்துள்ளது. இதில் ஆறு பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்திற்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் இருந்த மூன்று ராணுவ வீரர்கள் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் உட்பட மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப் படுத்துள்ள அமெரிக்க அரசு இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்  அளிக்கவில்லை. 



இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியிலிருந்து புறப்பட்ட லியர்ஜெட் 55 என்ற சிறிய ரக விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் வந்து 
கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்  கீழே விழுந்து விபத்திற்கு உள்ளானது. 

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விமானம் குடியிருப்பு பகுதிகள் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விமானம் மோதியதில் வீடுகள், வாகனங்கள் தீப்பிடித்து எறிந்தன. விமானத்தில் இருந்த  ஆறு பயணிகள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

மழலைக் குழந்தை!

news

நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!

news

மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி

அதிகம் பார்க்கும் செய்திகள்