ஆசிய கோப்பை ஹாக்கி : அபார வெற்றியுடன் அரையிறுக்கு முன்னேறிய இந்தியா

Aug 10, 2023,11:16 AM IST
டெல்லி : ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.



இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய 6 நாடுகள் மோதும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் ஆகஸ்ட் 03 ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் பிரிவு போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இதனால் அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. 

அதே போல் மற்றொரு லீக் போட்டியில் சீனாவை வீழ்த்தி ஜப்பானும் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதி போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெறும். அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியுடன் மோத உள்ளது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேசியா அணி தென் கொரிய அணியுடன் மோத உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்