ஆசிய ஹாக்கி போட்டி : மலேசியாவை இன்று பைனலில் சந்திக்கிறது இந்தியா!

Aug 12, 2023,09:39 AM IST
சென்னை : பாகிஸ்தானை தொடர்ந்து ஜப்பானையும் அபாரமாக வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பைனலுக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. இதற்காக இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

6 நாடுகள் மோதும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி  ஹாக்கி போட்டி தொடர் ஆகஸ்ட் 3 ம் தேதி துவங்கி நடந்த வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 12 ம் தேதியான இன்று சென்னையில் நடைபெறுகிறது. 



இதில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அணிகளின் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் லீக் சுற்று போட்டிகளின் கடைசி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. 

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11 ம் தேதியான நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது.  நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேசியா மற்றும் தென்கொரிய அணிகள் மோதின. இதில் மலேசிய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு சென்றுள்ளது.

இதனால் இன்று நடைபெறும் பைனலில் இந்தியா அணி, மலேசிய அணியை எதிர்கொள்ள உள்ளது. 3வது மற்றும் 4வது இடங்கள் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஜப்பான் மற்றும் தென்கொரிய அணிகள் மோத உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

பிள்ளையார்பட்டி குடவரை கோயில் – தல வரலாறு!

news

கனவு

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

இட்லி மாதிரி.. குழியில் விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும்!

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

news

காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி...தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்