பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், வருகிற ஐபிஎல் சீசனில் அங்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எந்தப் போட்டியிலும் விளையாடாது என்று கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்டும் கூட மாற்றப்படவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, 17 வருட காத்திருப்புக்குப் பிறகு 2025 ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த வெற்றியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அந்த அணிக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விட்டன. வெற்றிக் களிப்புடன் கொண்டாடுவதற்காக எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தில் குவிந்த ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் பலியானார்கள். இதனால் தற்போது சின்னச்சாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் போட்டிகள் அனைத்தையும் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் (MCA) மைதானமான புனேவில் விளையாட தற்போது பேச்சுக்கள் நடைபெறுகின்றனவாம். புனேவில் RCB போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கர்நாடகாவில், நடந்த கூட்ட நெரிசல் காரணமாக அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஒரு மைதானத்தைத் தேடுகிறார்கள், நாங்கள் எங்கள் மைதானத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, மேலும் சில தொழில்நுட்ப விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும். விஷயங்கள் சரியாக நடந்தால், புனே போட்டிகளை நடத்தும்," என்று மகாராஷ்டிராக கிரிக்கெட் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். 2009 இல், முழு ஐபிஎல் தொடரும் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டபோதும், மற்றும் கோவிட் காலங்களில் (2020-22) மட்டுமே ஆர்சிபி அணி பெங்களூருவில் விளையாடாமல் இருந்தது.
17 வருட காத்திருப்புக்குப் பிறகு கோப்பையை வென்ற மகிழ்ச்சியை சொந்த மண்ணில் கொண்டாட முடியாமல் போவது அந்த அணியின் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி
தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு
பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
{{comments.comment}}