சென்னை : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். தை மாத பிறப்பு அல்லது மகர சங்கராந்தி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி என்றாலே வீட்டில் உள்ள வேண்டாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டும் என்பது தான் காலம் காலமாக சொல்லப்பட்டு வருவது.

பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகிப் பண்டிகையாகும். வீட்டை சுத்தம் செய்து, புதுமைகளையும், பொங்கல் பண்டிகையையும் கொண்டாட தயாராகும் நாள் போகிப் பண்டிகையாகும். இந்த நாளில் பொது இடத்தில் தீ வைத்து எரித்து அல்லது பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, அதனைச் சுற்றி, நடனமாடி ஆடிப்பாடி மக்கள் மகிழ்வதுண்டு. பொங்கல் என்பது அறுவடை திருநாள் என்பதால், விவசாயத்திற்கு ஆதாரமான மழைக்கு நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படும் நாளே போகிப் பண்டிகை என சொல்லப்படுகிறது.
மழையின் தெய்வமாகிய இந்திரனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து, ஆண்டு முழுவதும் நல்ல மழையை பெய்ய செய்து, மண்ணை செழிக்க வைப்பார். அதனால் இன்பமம், செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
இதே போல் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பினை வழிபட்டு, நன்றி செலுத்துவதற்காக தான் போகி அன்றும் நெருப்பு வைத்து எரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நெருப்பு என்பது அக்னி தேவனை குறிப்பதாகும். இவர் ஒளி, ஆற்றல் மற்றும் தூய்மையின் அடையாளமாக கருதப்படுபவர்.
அதனால் நெருப்பு வைத்து அக்னி தேவனை வழிபடுவதால் எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் நீங்கி, நேர்மறை ஆற்றல்கள் நம்முடைய வாழ்வில் நிறையும் என்பது நம்பிக்கை.
இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்களும் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. பொங்கல் நாள் முதல் குளிரின் தாக்கம் குறைந்து, சற்று வெப்பமான சீதோஷன நிலை நிலவத் துவங்கும். இதனால் கோடை காலம் அல்லது வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்வாகவும் நெருப்பு வைத்து, ஆடிப்பாடி அக்னியை வழிபட்டு, போகிப் பண்டிகையை கொண்டாடுவதாகவும் சொல்லப்படுகிறது. இது இயற்கை அன்னையை வழிபடுவதற்கான நாளாகவும் கருதப்படுகிறது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}