சென்னை : விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்த விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் அளிக்காமல் பாஜக மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் அதே வேளையில் அதே ஏப்ரல் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வந்து இணைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயதாரணிக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜயதாரணி ஏமாற்றம் அடைந்தார். சரி, விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் நந்தினி என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனால் லோக்சபா தொகுதியும் கிடைக்காமல், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்காமல் விஜயதாரணி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்? ஏன் பாஜகவில் வந்து இணைந்தார்? என்பதற்கே இதுவரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. இப்பொழுது லோக்சபா தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை, சட்டசபை இடைத்தேர்தலும் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் அவரது தரப்பு கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.
விஜயதாரணியின் கட்சி தாவலுக்கான நோக்கம் என்ன என்பதும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது . விஜயதாரணி இனி என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
வேற்றுமையில் ஒற்றுமையே .. நம் தேசத்தின் சிறப்பு!
பத்ம விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன.. யாருக்கெல்லாம் அது கிடைக்கும்..?
கிரீடங்களை விட, அரசியல் சாசனத்தின் மைத்துளி வலிமையானது!
பத்ம விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன.. யாருக்கெல்லாம் அது கிடைக்கும்..?
சகலருக்கும் கிட்டியது வாக்கினும் மாபெரும் பரிசு.. குடியரசு!
தாயின் மணிக்கொடி பாரீர்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
{{comments.comment}}