கொல்கத்தா: அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நிறைவுற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 294 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் முறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 293 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனையடுத்து பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார். மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது ஆட்சியைப் பறி கொடுக்கிறது.
கேரளா:

கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 100 இடங்கள் முன்னிலையை நெருங்கி வரும் நிலையில், இடது முன்னணி 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி. முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தை வீழ்த்தியுள்ளார். இங்கு மீண்டும் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியே தொடரவுள்ளது.
அசாம்:
அசாமில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. பல கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜகவே வெல்லும் என்று கூறியிருந்தன. அதற்கேற்ப அங்கு மீண்டும் பாஜகவே வெல்கிறது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}