சென்னை: சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு உடனடியாக செய்து தர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், இந்துக்கடவுள்களின் மீதுள்ள வெறுப்பில் பக்தர்களைப் பழிவாங்கத் துவங்கிவிட்டனவா இண்டி கூட்டணியினர் ஆளும் மாநில அரசுகள்?
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுவதாகவுtம், அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவரும் செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.

பிற கோவில்களைப் போலல்லாமல் 41 நாட்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் சபரிமலையில், கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் குவிவார்கள் என்பது அம்மாநில அரசுக்குத் தெரியாதா? அதுவும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் தமிழகத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நாயகனை நோக்கி படையெடுப்பார்கள் என்பதைக் கேரள அரசு கணிக்கத் தவறிவிட்டதா அல்லது இந்துக்கடவுளைத் தரிசிக்க வருபவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் எனக் கைகழுவி விட்டுவிட்டதா?
இப்படி நாத்திக போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்துக்களை மறைமுகமாக வதைக்கும் பெரும் பாவம் தான், இந்தியா முழுவதும் இண்டி கூட்டணி அரசுகளை அரியணையில் இருந்து ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழகம்: நயினார் நாகேந்திரன்!
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
நட்பே வா!
இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
{{comments.comment}}