கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

Oct 13, 2025,02:59 PM IST

சென்னை: கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த அறிவாலய

அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிய மனுக்களை மதுரை ஐகோர்ட் கிளை நிராகரித்தது.


இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, இந்த மனு மீதான தீர்ப்பை அக்டோபர் 13 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இனி சிபிஐ விசாரிக்கும். ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலையிலான 3 பேர் கொண்ட குழு இந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்கும். இந்தக் குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 




அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! 


கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அவர்கள் தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள நமது மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த அறிவாலய

அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை தமிழாசிரியைக்கு குரு துரோணச்சார்யா விருது.. புதுச்சேரி விழாவில் கெளரவம்

news

கொள்ளை (சிறுகதை)

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

நேராகத் தோன்றிடினும்.. அம்பு கொடியது..! (சிறுகதை)

news

நிறைய படிச்சேன்.. எனது பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்கிறேன்.. அசத்தும் சங்கீதா

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்