மணிப்பூர்: மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்துள்ளது.இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பால் மேற்கு, டாங்மிபந்தில் டி.எம் கல்லூரி உள்ளது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதில் உயிரிழந்தவர் 24 வயதான ஓனம் கெனேஜி என காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் குண்டுவெடிப்பு குறித்த காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.
மணிப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பதற்ற நிலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே வன்முறை, பதற்றம் என நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சிகளின் போராட்டம் போராட்டம் போன்றவற்றாலும் அந்த மாநிலத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக வளாகத்திலேயே வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}