தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புத்தகங்களை வழங்கி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தி பேசினார் .
புத்தகம் என்பது கடந்த கால தலை முறையினரையும், எதிர்கால சந்ததியினரையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏனெனில் வரலாற்று சிறப்புகள் குறித்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள புத்தகம் பேருக்கு உதவி புரிகிறது. அதே சமயத்தில் நாட்டின் நடப்பு நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

இது மட்டுமல்லாமல் புத்தகத்தின் மூலம் பல்வேறு தகவல்களை பெற முடிகிறது. குறிப்பாக குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்படுகிறது. அந்தந்த மொழிகளின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் புத்தகம் வாசிப்பின் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதனை கருத்தில் கொண்டு அனைவரிடமும் புத்தகம் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக ஏப்ரல் 23ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகப் புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும், உலகப் புத்தக தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புத்தகம் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம் ஆகும். மனிதனை மனிதனாக மாற்றுவது புத்தகம் மட்டுமே. மனிதன் புத்தகம் படித்தால் மட்டுமே சிறந்த மனிதனாக வளர முடியும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது. வெளி உலக அனுபவமும் கண்டிப்பாக தெரிய வேண்டும். அதற்கு இந்தப் பள்ளியில் ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை பாராட்டுகின்றேன். வாழ்த்துகள் என கூறினார்.
பின்னர் சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}