டோரன்டோ: நடிகர் மாத்யூ பெர்ரியின் மறைவுக்கு கனடா பிரமர் ஜஸ்டின் ட்ரூடியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இருவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாத்யூ பெர்ரியின் தாயார் சூசன் மாரிசன், ஜஸ்டினின் தந்தை பியர்ரி ட்ரூடியோ பிரதமராக இருந்தபோது அவரது பிரஸ் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டினும், மாத்யூவும் தொடக்கப் பள்ளிப்படிப்பை இணைந்து படித்தவர்கள். நீண்ட காலத் தோழர்கள்.
தனது நண்பன் மாத்யூ மறைவு குறித்து ஜஸ்டின் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜஸ்டின் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

மாத்யூ பெர்ரியின் மரணம் அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது. சோகமாக உணர்கிறேன். பால்ய காலத்தில் பள்ளி வளாகத்தில் நாங்கல் இருவரும் விளையாடிய விளையாட்டுகள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அவரை அறிந்த யாருமே அவர் கொடுத்த அந்த சந்தோஷத்தையும், சிரிப்பையும் அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டார்கள். அவரை நிறைய மிஸ் செய்வார்கள். நீ கொடுத்த சிரிப்புகளுக்கு நன்றி மாத்யூ. நீ அனைவராலும் நேசிக்கப்பட்டாய்.. உன்னை நாங்கள் நிச்சயம் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார் ஜஸ்டின்.
ஜஸ்டினை அடித்த மாத்யூ பெர்ரி
ஜஸ்டின் குறித்து 2017ம் ஆண்டு ஒரு பேட்டியின்போது சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார் மாத்யூ பெர்ரி. அப்போது அவர் கூறுகையில், அப்போது நானும், ஜஸ்டினும் 5வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கும், எனது நண்பன் ஒருவருக்கும் ஜஸ்டின் மீது பொறாமை இருந்தது. காரணம், எங்களால் சரியாக விளையாட முடியாத ஒரு விளையாட்டில் ஜஸ்டின் சூப்பர் திறமையுடன் இருந்தால். இதனால் நானும் எனது நண்பனும் சேர்ந்து ஜஸ்டினை அடித்து விட்டோம்.
அப்போது ஜஸ்டின் மிகவும் மென்மையானவனாக இருந்தார். இதனால் அவரை எளிதாக அடித்து விட்டோம். அதற்காக இப்போது வருந்துகிறேன்.. அதை நான் செய்திருக்கக் கூடாது. மோசமான பையனாக நான் இருந்துள்ளேன் என்று கூறியிருந்தார் மாத்யூ பெர்ரி. கனடாவின் பிரதமராக ஜஸ்டின் உயர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு இது கனவாக இருந்தது. என்னிடம் அடிக்கடி நான் கனடாவின் பிரதமராவேன் என்று கூறிக் கொண்டே இருப்பார். நான் அவரை நிறைய ஊக்குவித்தேன் என்று கூறியிருந்தார் மாத்யூ பெர்ரி.
பிரண்ட்ஸ் டிவி தொடரின் முக்கிய நடிகரான மாத்யூ பெர்ரி தனது 54வது வயதில் பாத் டப்பில் பிணமான நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரண்ட்ஸ் தொடர் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}