விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்

Jan 12, 2026,06:59 PM IST

டில்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் முற்பகல் 11 மணி முதல் மாலை 3.45 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் கிளம்பிச் சென்றார். நாளையும் அவரிடம் விசாரணை நடைபெறுமா என்று தெரியவில்லை. நாளையும் விசாரணைக்கு ஆஜராக இதுவரை சிபிஐ தரப்பில் சம்மன் தரப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.


செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையில் இருந்து கரூர் முகாம் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 12ம் தேதியான இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் விஜய்க்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.



இதன் அடிப்படையில் நேற்று மாலை டில்லி வந்த விஜய், இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் நேரில் சென்று ஆஜரானார். வழக்கமானவர்களுக்கு கடைபிடிக்கப்படும் முறைக்கு மாற்றாக, விஜய் வந்த கார் விவிஐபி.,க்களுக்கு அளிக்கப்படும் சலுகையில் போர்டிகோ வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. காலை 11.30 மணியளவில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். தொடர்ந்து 4 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விசாரணையின் போது, கரூரில் பிரச்சாரத்தின் போது என்ன நடந்தது என விஜய்யிடம் அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது.


அதோடு விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சிபிஐ அலுவலகத்தின் விஜய் இருக்கும் போதே தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி டேவிட் தேவஆசீர்வாதத்தையும் டில்லிக்கு வரவழைத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் டேவிட் தேவஆசீர்வாதம் ஆகிய இருவரிடமும் துருவி துருவி பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


விஜய்யிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. இதோடு விஜய்யிடம் விசாரணை முடிந்ததா அல்லது மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என தெரியவில்லை. அதேசமயம் இன்று அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கவுள்ளார். நாளையும் அவரிடம் விசாரணை தொடருமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. லேட்டஸ்டாக கிடைத்துள்ள தகவல்களின்படி விஜய்யிடம் நாளை விசாரணை நடைபெறாது என்று கூறப்படுகிறது.


விஜய் இன்று இரவு நட்சத்திர ஹோட்டலில் தங்கவுள்ளார். நாளை இரவுதான் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரை  சில முக்கிய அரசியல் புள்ளிகள் சந்திக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்

news

வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!

news

தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

news

2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்