சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விதியை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் விதி திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 வகுப்புகளில் குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
அதில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று, ஐந்து, எட்டாம், வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. நோ ஆல்பாஸ் தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் கையெழுத்து கேட்டால் போட மறுத்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பெயில் நடைமுறையால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே ஒன்பதாம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டனர். இதனால் தற்போது மதிப்பெண்கள் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமலுக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}