- க. யாஸ்மின் சிராஜூதீன்
தைமாதம் பொறந்தாச்சு
பொங்கல் பண்டிகை வந்தாச்சு
அறுவடைப் பண்டிகை நெல்லாச்சு
தமிழர்வாழும் நாடெல்லாம் கொண்டாட்டமாச்சு....
வீடெல்லாம் சுத்தமாச்சு
புதுவண்ணம் பூசியாச்சு
புத்தாடை வாங்கியாச்சு
ஆடி மாதம் நெல் விதைத்து
தை மாதம் அறுவடை செய்து
புதுப்பானை வாங்கியே
புது அரிசி போட்டுத்தான்

கரும்பு தோரணம் மஞ்சள்குங்குமம்
படையல் எல்லாம் போட்டுத்தான் ...
பொங்கலோ பொங்கல்.... என்று சொல்லிதான்
சூரியபகவானுக்கும் இயற்கைக்கும்
செலுத்தும் நன்றியே...
நான்கு நாட்கள் கொண்டாட்டமே
ஒவ்வொருநாளும் திருவிழாவே
பொங்குக பொங்கல் பொங்கவே
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே
சீறும்சிறப்புமாய் வாழவே
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நானும் சொல்ல விழைந்தேனே
கவிதை எழுதி சொன்னேனே.
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்நலமுடன் .!!
இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை....
முந்தைய நாளாம் போகி
மார்கழி மாதத்தின் கடைசிநாளாம்
போகி பண்டிகை ....
பழையனகழிதலும் புதியன புகுதலும்
போகியென மூத்தோர் சொன்னது
பழந்துயரங்களை அழித்துப் போக்குவதால் 'போக்கி"என்றனர்
'போக்கி ' மருவி 'போகி' ஆனது
'ருத்ர கீதை ஞான யக்ஞம் ' அக்னிகுண்டத்தில்...
தேவையற்ற பொருட்கள் மட்டுமல்ல
தீய எண்ணங்களும் எரிக்க வேண்டுமே..
இதுவே போகி பண்டிகை தத்துவமாகுமே....
ஆன்மாவை உணர்தல், தூய்மையாக்குதல் இப்பண்டிகையின் பிரதிபலிப்புஆகுமே...!!!!
பூலாப்பூ, வேப்பிலை, ஆவாரம்பூ
வீட்டின் கூரையில் செருகியே..
முன்வாயிலுக்கு மஞ்சள்பூசிதான் திலகமிட்டு தோகை விரித்த கரும்பு
சாத்தி நிற்க வைத்துதான்...
வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு குங்குமம் இட்டு தேங்காய் உடைத்துதான்
இல்லுறை தெய்வத்தை இல்லத்தரசி வணங்குவார்
வைகறையில் 'நிலைப் பொங்கல் 'தான் .....
போளி, வடை, பாயாசம், மொச்சை,
சிறுதானியம், பருப்பு படையல்தான் ..
இடைகுளிர்காலப் பண்டிகைதான்
ஊர் முழுவதும் களை கட்டியதுதான்
வீடுமுழுவதும் தூய்மையானதுதான்
மனமெல்லாம் தூய்மைதான்
தீமைகள் விலகட்டும் நன்மைகள்
படரட்டும் இந்நன்நாளிலே
இனிய போகிபண்டிகையை
இனிதே நாமும் கொண்டாடுவோம்..!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}