டெல்லி: மத்திய அரசு நடத்தி வரும் பள்ளிகளில் தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இனிமேல் தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்குத் தகுதி பெற முடியும்.
அதேசமயம், எந்த ஒரு மாணவ மாணவியும் அவர்களது தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை பள்ளியை விட்டு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நடத்தி வரும் 3000 பள்ளிகளில் இந்த புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்வு முறை ஏற்கனவே அமலில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த புதிய முறைக்கு மாறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
5 மற்றும் 8ம் வகுப்புகளில் இனி வருடாந்திரத் தேர்வுகளில் தோல்வி அடைவோர் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியாது தோல்வி அடைபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து அடுத்த 2 மாதங்களில் அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி அடைந்தால்தான் அடுத்த வகுப்புகளுக்கு முன்னேற முடியும்.
அதேசமயம் மறு தேர்விலும் தோல்வி அடைந்தால் மீண்டும் அவர்கள் 5 மற்றும் 8ம் வகுப்பிலேயே தொடர்வார்கள். அவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூடுதல் வழி காட்டுதல் கொடுக்கப்படும்.
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் இந்த புதிய முறை அமல்படுத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மாநில திட்டத்தின் கீழ் வருவதால் மாநிலப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதை மாநில அரசுகளின் முடிவுக்கே விடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ரவி மோகன்... இயக்குனராகவும் அவதாரம்!
அது என்ன 39% ஓட்டுக் கணக்கு.. அமைச்சர் அமித்ஷா சொன்னது இதைத் தானா?
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
குருதிப்பூக்கள் (சிறுகதை)
{{comments.comment}}