சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கெவின் ஆபிரகாம், யாழிசை, கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, செவிலியர் உமாமகேஸ்வரி, மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.

மேலும், சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர். சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் ஷாஜஹான், தேவதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர். முகாமின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}