டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் நடத்தவுள்ள இந்தத் தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முதல் போட்டி வருகிற 20ம் தேதி நடைபெறவுள்ளது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதவுள்ளது.
இப்போட்டித் தொடருக்காக இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரரும், விக்கெட்கீப்பருமான ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். பயிற்சியின்போது அவரது முழங்காலில் அடிபட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் கார் விபத்திலிருந்து மீண்டு மீண்டும் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்கும் முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுதான். இந்திய அணிக்கு குறிப்பாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஸ்டிரைக் ரேட் இவர் வைத்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதவீதம் என்ற அளவுக்கு ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
துபாயில் நடந்த பயிற்சியின்போது ஹர்டிக் பாண்ட்யா வீசிய பந்து, பந்த்தின் இடது முழங்காலில் பட்டதால் அவர் காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வலியால் சிறிது அவதிப்பட்டாலும் கூட தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பந்த். கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது இதே காலில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பதால் இந்த புதிய காயமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பந்த் உடல் தகுதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அவர் விளையாடுவாரா அல்லது முதல் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வெடுப்பாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை இல்லை.
23ம் தேதி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. பந்த் அந்தப் போட்டிக்கு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா இதுவரை 2002 மற்றும் 2013 ஆண்டுகள் என 2 முறை சாம்பின்ஸ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}