சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் நகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்., 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்., 10-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்., 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை முதல் 9-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}