சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய கழிதலும் புதிய புகுதலும் என்பதை வரவேற்கும் வகையில் பழைய பொருட்களை தீவைத்து எரித்து மக்கள் போகியை கொண்டாடி தை மாதத்தை வரவேற்கின்றனர்.
போகியையொட்டி அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு தீவைத்து எரித்ததால் புகை சூழ்ந்து பல ஊர்களிலும் புகை மூட்டமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் பனியுடன், கடும் புகை மூட்டமும் சூழ்ந்தது.

பொங்கல் பண்டிகை தொடங்கி விட்டது. இன்று முதல் நாளில் போகியை மக்கள் கொண்டாடினர். பழையவற்றை எரித்து புதியவற்றை இந்த நாளை மக்கள் கொண்டாடுவர். உண்மையில் இந்த நாள், மழைக்கு நன்றி சொல்லும் தினமாகும். உயிர்களுக்கு ஆதாரமாக திகழும் மழைக்கு நன்றி சொல்லி இந்த நாளை கொண்டாடி அடுத்து தைப் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள்.
இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மக்கள் பழைய பொருட்களைப் போட்டு எரித்து போகியை கொண்டாடினர். போகியைச் சுற்றி வந்து ஆடியும், மேளம் முழங்கியபடியும் கடவுளை வணங்கி வழிபட்டனர்.

போகியால் கிளம்பிய புகை பல ஊர்களையும் சூழ்ந்திருந்தது. குறிப்பாக சென்னையில் ஏற்கனவே பனிமூட்டம் இருந்து வந்த நிலையில் தற்போது போகி புகையும் சேரவே, ஒரே புகை மூட்டமாக நகரே மூடிப் போய்க் கிடந்தது. சென்னை மற்றும் புறநகர்களில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புகைமூட்டமாக இருப்பதால் வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது.
சென்னையில் போகி புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைந்திருந்தது. சென்னையின் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு AQI மோசமாக இருந்தது. பெருங்குடியில்தான் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக 289 என்ற அளவில் இருந்தது. அதற்கடுத்து மணலியில் 272 என்ற அளவில் இருந்தது. அரும்பாக்கம் (216), காந்தி நகர் எண்ணூர் (232), ராயபுரம் (207) என்ற அளவில் பதிவானது
புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}