சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்தபடி ஆடியும், வெளியில் கையை விட்டுக் கொண்டும் சாகசம் செய்த 16 வயது சிறுவன், மின்சார கம்பத்தில் அடிபட்டு படுகாயமடைந்தான். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, மின்சார ரயிலில் வாசலில் நின்று கொண்டு சாகசம் செய்வது இப்படி விபரீதமான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பலர் உயிரைப் பறி கொடுத்தும் கூட இளைஞர்கள் பலர் திருந்தாமல்தான் உள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ளூர் மின்சார ரயில்களில் வாசலில் நின்றுகொண்டு சிலர் செய்யும் சேட்டைகள் மிகக் கொடுமையாக இருக்கின்றன. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ள இவர்களால் பலருக்கும் தலைவலியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படி வாசலில் நின்றபடி சேட்டை செய்த ஒரு சிறுவன், தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருகிறான். அந்த சிறுவனின் பெயர் அபிலாஷ். 16 வயதேயாகும் அந்த சிறுவன் ராயபுரத்தைச் சேர்ந்தவன். கடந்த 9ம் தேதி இவன் தனது நண்பர்களோடு மின்சார ரயிலில் பயணித்துள்ளான். அப்போது வாசற்படியில் நின்று கொண்டு சாகசம் செய்தபடி வந்துள்ளான் அபிலாஷ். கம்பியை பிடித்துக் கொண்டு ஊஞ்சாடுவது, ஒரு கையால் வெளியில் காற்றில் போய் வருவது என என்னென்னவோ செய்து கொண்டு வந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் படாரென மோதி கீழே விழுந்து விட்டான்.
இவன் செய்யும் செயல்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இவனது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அபிலாஷ் அபிலாஷ் என கூப்பிட்டுக் கத்தினர். செத்துட்டாண்டா, செத்துட்டாண்டா என்றும் அவர்கள் அலறியதும் வீடியோவில் பதி்வாகியுள்ளது. ராயபுரம் ரயில்வே போலீஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அபிலாஷ் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதெல்லாம் தேவையா.. இப்படிப்பட்ட சாகசங்கள் ஒஒருபோதும் பாதுகாப்பானதல்ல.. ஒரு நொடியில் உயிர் போய் விடும்.. இனியாவது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் இளைஞர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}