சென்னை: சென்னையில் உள்ள 245 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.6.50 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு என்பது சமீப காலமாக கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் இருந்து பெண் குழந்தைகளை காக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளில் சிசிடிவி கேரமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் திருவான்மியூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னையில் 206 தொடக்கப் பள்ளிகளும், 130 நடுநிலைப்பள்ளிகளும், 46 உயர்நிலைப் பள்ளிகளும், 35 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். சில குறிப்பிட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் வருகிற 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஓரிரு மாதங்களில் சிசிடிவி கேமராக்கள் பள்ளிகளில் பொருத்தும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}