சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியாவை, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். சதீஷின் காதலுக்கு சத்யபிரியா சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, சத்யபிரியா கல்லூரிக்குச் செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, சதீஷூம் அங்கு வந்துள்ளார். அப்போது தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த வழியாக வந்த மின்சார ரயில் முன்பு சத்யபிரியாவை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரயில் மோதி சத்யபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சதீஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி கடந்த 27தேதி தீர்ப்பளித்தார். சதீஷை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, சதீஷூக்கான தண்டணை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று கொலையாளி சதீஷுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் உறுதி அளித்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன்.. ரூ. 3000 ரொக்கமும் தரப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}