சென்னை: ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2438 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்தது. முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடியில் 10த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடியில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை. அவர் துபாயில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் நேற்று முன் தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அவரிடம் விசாரணை நடைபெற்றது. சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஆஜரானார்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வந்தார். அவரிடம் கூடுதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இப்போதுதான் விசாரணை முடிவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நாளையும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளேன் என்றார் ஆர்.கே.சுரேஷ்.
முன்னதாக விசாரணைக்காக வந்த ஆர்.கே.சுரேஷிடம் தலைமறைவாக இருந்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தலைமறைவாகிவிட்டேனா... எல்லாம் இங்கே இருக்கும்போது நான் ஏன் தலைமறைவாக வேண்டும். வந்து பேசுகிறேன் என்று கூறி விசாரணைக்கு சென்றார்.
நீர் கொண்ட மேகம் போல் கார் குழலோ.. நீ இன்றி நான் வாழக் கூடுமோ!
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
{{comments.comment}}