சென்னை: சென்னை மெட்ரோவில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பயண அட்டை இன்று முதல் செல்லாது என அறிவித்த நிலையில், அதனைக் கொடுத்து புதிய சிங்கார சென்னை அட்டையை பெறுமாறு CMRL அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன், 2023ம் ஆண்ட முதல் தேசிய பொதுபோக்குவரத்து அட்டையான சிங்கார சென்னை அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு அட்டைகளையும் பயணிகள் பயன்படுது்தி வந்த நிலையில், இன்று முதல் முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாறுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டையை ரீ சார்ஜ் செய்யும் வசதி நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

இன்று (ஆக., 1) முதல் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையான சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பழைய சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையைக் கொடுத்துவிட்டு புதிய பயண அட்டையை கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பழைய CMRL பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகையை, புதிய NCMC எனப்படும் சிங்கார சென்னை அவ்வடக்கு மாற்றிக் கொண்டு பயணிகள் மெட்ரோவில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கியூ ஆர் கோட் மற்றும் ஆன்லைனில் பயணச்சீட்டுகள் பெறும் முறைகள் வழக்கம் போல் தொடரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மெட்ரோ ரயிலுடன் இணையும் பறக்கும் ரயில்:
சென்னை பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியது. பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}