சென்னை: 2024-2025ம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை பிப்., 21ம் தேதி சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 22ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலை குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 2023-24 ஆம் ஆண்டின் நிதி ஆண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூபாய் 4131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூபாய் 4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூபாய் 3554.50 கோடியாகவும், மூலதன செலவு ரூபாய் 3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.
இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 334 கோடி நிதி பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 778 கோடியாக இருந்தது. தற்பொழுது 517 கோடியாக உள்ளது. சொத்து வரி உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு இப்படி இருக்க இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

2024-2025ம் ஆண்டிற்கான சென்னை பட்ஜெட் பிப்., 21ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இந்த பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளான 22ம் தேதி பொது பட்ஜெட் குறித்து விவதாம் நடைபெற உள்ளது.
கடந்த அண்டை போலவே இந்தாண்டும் பட்ஜெட் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தாண்டு எந்த மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், புதிய திட்டங்கள் என்னவாக இருக்கும் என்றும் மக்களிடை விவதாம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி 2024-2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எது எது நிலுவையில் உள்ளன என்ற மேயர் பிரியா தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தலில் தோற்றது ஏன்? திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
{{comments.comment}}