தினம் தினம் பரபரப்புடன் சென்னை போலீசார்

Dec 27, 2025,03:07 PM IST

சென்னை: தினம் தினம் பரபரப்புடன் சென்னை போலீசார் பணி செய்து வருகின்றனர்.


தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ஒரு கோடிக்கும் மேலான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை போலீசார் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் இயங்கி வருகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை அவர்கள் சந்திக்கும் அன்றாட பரபரப்புகள் பல.


காலை 7 மணி முதலே சென்னையின் முக்கிய சந்திப்புகளான அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கடும் நெருக்கடியைச் சமாளிக்கின்றனர். நள்ளிரவு ரோந்து முடித்துத் திரும்பும் காவலர்கள், அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். செவிலியர்கள், ஆசிரியர்கள், இப்போது தூய்மை பணியாளர்கள் என தினம் தினம் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்து வருகின்றன. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் இந்தப் பேரணி நடக்கும் இடத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.




சென்னையில் தினசரி ஏதேனும் ஒரு பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் அல்லது போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதனை அசம்பாவிதங்கள் இன்றி கையாள்வதில் சட்டம்-ஒழுங்கு போலீசார் பெரும் நேரத்தைச் செலவிடுகின்றனர். தற்பொழுது சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டங்களில் போலீசார் பெரும் பங்காற்றி வருகின்றனர்.  குறிப்பாக மெரினா கடற்கரைச் சாலை மற்றும் ஈசிஆர் (ECR) பகுதிகளில் வார இறுதி நாட்களில் இளைஞர்களின் பைக் ரேஸைத் தடுக்க போலீசார் விடிய விடியக் கண்விழித்துப் பணியாற்றுகின்றனர்.


அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் நகர்வுகளுக்காக 'கார்டன்' (Cordon) அமைத்து பாதுகாப்பை உறுதி செய்வது தினசரி சவாலாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் சென்னையின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. ஹெல்மெட் சோதனை, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிதல் எனப் போக்குவரத்துப் பிரிவு சுறுசுறுப்பாகிறது. பகல்-இரவு பாராமல் ஆன்லைன் மோசடிகள் குறித்த புகார்களைப் பெற்று, உடனடி நடவடிக்கை எடுத்துப் பணத்தை முடக்கும் பணிகளில் சைபர் லேப்கள் பரபரப்பாக இயங்குகின்றன.


அது மட்டுமின்றி குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 'ஜிபிஎஸ்' (GPS) பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அனைத்து சந்துகளிலும் ரோந்துப் பணி நடைபெறுகிறது. குறிப்பாக, சென்னை மெட்ரோ விரிவாக்கப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்களைச் சீரமைப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை போலீசாரைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலாகவே உள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, இவர்கள் மட்டும் தெருக்களில் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருப்பது சென்னையின் "பரபரப்பு" குறையாமல் இருக்க முக்கியக் காரணமாகும்.


(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

news

SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

news

திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!

news

சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்