திருப்பத்தூர்: தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்பைவாரி வழங்கி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமில்ல 2031, 2036 தேர்தலிலும் திமுக தான் வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பல்வேறு பிரிவுகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகினார். அதுமட்டும் இன்றி 175 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆம்பூர் பிரியாணி, சந்தனக்காடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் திருப்பத்தூர். திருப்பத்தூரில் 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு சமூக கல்வியில் முதலிடம், நீடித்த வளர்ச்சியில் மூன்றாவது இடம், பணவீக்கத்தில் முதலிடம், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது, சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆபத்து . கடவுள் பெயரை மிஸ் யூஸ் செய்து வருகிறார்கள். அதிமுகவும், பாஜகவும் மக்களுக்காக கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றன. அரசியலுக்காக கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். அண்ணா பெயரில் கட்சியை நடத்துபவர்கள் அண்ணாவை அவமானப்படுத்தும் வீடியோவை கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். இன்று கட்சியை அவமதித்தவர்கள், நாளை தமிழ்நாட்டை அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது.
மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1000 வழங்கப்படும். 2016 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை மக்களின் வரவேற்பு காட்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
{{comments.comment}}