சென்னை: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் ஏடிஎம் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தனியாங்கி இயந்திரம் மூலம் ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திர தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால் குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டம் முதல் கட்டமாக 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தினசரி 1300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் சுத்தமசன குடிநீர் பெறலாம். கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள் மார்க்கெட் போன்ற இடங்களில் இந்த எடிஎம்கள் நிறுவப்பட உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 250 பேருக்கு குடிநீர் வழங்கும் திறன் கொண்ட டாங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏடிஎம்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பராமரிப்பு பணிக்காக தனி குழுவும் அமைக்கப்படும். சென்னை குடிநீர் வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
{{comments.comment}}