வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Oct 30, 2024,11:36 AM IST

ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. பசும்பொன்னிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பெரும் திரளாக அஞ்சலி செலுத்த வருவது வழக்கம்.  இதனால் பசும்பொன் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.




அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் நினைவிடம் வந்து இன்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காலை 8 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பின்னர் சிலைக்கு கீழ் உள்ள தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 


மதுரை நிகழ்வை முடித்து பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு சென்ற முதல்வர் பசும்பென்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும்  மரியாதை செலுத்தினார். முதல்வருடன் ஐ.பெரியசாமி, மூர்த்தி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.


எடப்பாடி பழனிச்சாமி - ஆளுநர் ஆர். என். ரவி அஞ்சலி




இதேபோல முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் தேவர் திருமகனுக்கு அஞ்சலி செலுத்தினார். கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி தவிர, வி.கே.சசிகலா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிமைப்பாளர் சீமான்,  பாமக அவைத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக எம்.பி. துரை வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் மரியாதை செய்தனர்.


சென்னை ராஜ்பவனில் பசும்பொன் தேவர் படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.


தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் காவல்துறையினர் விதித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்