சென்னை: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலொசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அதிகரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாரக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}