சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோடை காலத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான 127வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. கடந்த 12ம் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்ற முதல்வர் இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24, 60,000 செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் 5 நாள் சுற்றுப்பயணம் முடிவுற்று இன்று சென்னை புறப்படுகிறார் முதல்வர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 24ம் தேதி டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மே 24ம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பின் படி நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}