முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்

Nov 04, 2023,07:54 PM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சலுடன், இருமலும் இருப்பதால் முதல்வர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவ அறிவுறுத்தி உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சலும், லேசான இருமலும் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் நேற்றைய தினம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்தார். ஆனால் சுகவீனம் காரணமாக அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.



இது தொடர்பாக மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், காய்ச்சல் மற்றும் சளி காரணமாக பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை பரிசோதித்த போது, வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதற்கு சிகிச்சை எடுக்கவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க விருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எளிமையின் முரண்

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

அதிகம் பார்க்கும் செய்திகள்