ஷாங்காய்: நவீனமான ஏடிஎம் மெஷின் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க ஏ.டி.எம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மக்களின் சிரமத்தை தவிர்க்க, வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறை மாற்றப்பட்டு தற்போது ஏடிஎம்களின் மூலம் பணத்தைப் பெற்ற முடிகிறது . ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் நாம் எங்கு சென்றாலும் அவசர காலங்களில் தேவைக்கேற்ப பணத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இப்போது அதுவும் மாறி யுபிஐ வந்து விட்டது. கணக்கில் காசு இருந்தால் போதும், கையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
அதே சமயத்தில் ஏழை எளிய மக்கள் தங்கள் கையில் போதுமான இருப்பு பணம் இல்லை என்றால் தங்க நகைகளை அடமானம் வைத்தோ அல்லது நகைகளை விற்றோ பணத்தை பெறுகின்றனர். இதற்கு நேரடியாக வங்கிகளை மட்டுமே அனுகி பணத்தைப் பெற முடிகிறது. ஏனெனில் தங்க நகைகள் எவ்வளவு தூய்மையானது என்பதை கணக்கிட்டு அதன்பிறகே பணத்தைப் பெற முடியும்.

ஆனால் சீனா இந்த நடைமுறையை முற்றிலும் மாற்றி உள்ளது. வங்கிகளில் சென்று தங்க நகையை விற்று பணம் பெறப்படும் முறையை மாற்றி, அதற்கு பதிலாக 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் கோல்டு ஏடிஎம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது சீனா.
ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்க ஏடிஎம்மில் தங்க நகைகளை கொடுத்தவுடன், அதன் அளவு தூய்மை மற்றும் எடையை சரிபார்த்து, அதற்குரிய தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. இதில் மூன்று கிராம் முதல் ஒரு கிலோ எடை வரை கொண்ட தங்க நகையை உருக்கி பணமாகப் பெற முடியும்.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் நடத்தப்படும் இந்த ஏடிஎம், குறைந்தது 50% தூய்மை கொண்ட தங்கப் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது. இது தங்கத்தை உருக்கி, அதன் தரம் மற்றும் எடையைச் சரிபார்த்து, பின்னர் அதற்குச் சமமான மதிப்பை 30 நிமிடங்களுக்குள் விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றுகிறது. இதற்கு எந்த ஆவணங்களும் அல்லது அடையாள அட்டையும் தேவையில்லை.
ஆனால் நம்ம ஊர்ல இதைக் கொண்டாந்து வச்சா ஒரு சிக்கல் வரும்.. அதாவது நகைத் திருடர்கள் ஜாலியாக கொண்டு வந்து இங்கு நகையை உருக்கி காசாக்கி விட்டு எஸ்கேப் ஆகி விட வாய்ப்பிருக்கு.. ஸோ, நமக்கு இது இப்போதைக்கு செட் ஆகாது!
NATIONAL TELL A JOKE DAY.. "WIFE..ன்னா என்ன தெரியுமாங்க?"
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
எளிதில் மந்திரியாக எளிய வழி!
கவிதை வராவிட்டாலும் எழுது
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கடவுள் ஏன் கல்லானார்?
கண்தானம்!
Sunday Short story: எதார்த்தம்!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
{{comments.comment}}