சென்னை : கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்ட துவங்கி விட்டது. இயேசு கிறிஸ்து அவதரித்த நாளையே நாம் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், குடில், ஸ்டார் இவைகள். அதோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு உற்சாகத்தை தரும் ஒரு நபர் கிறிஸ்துமஸ் தாத்தா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சாண்டா கிளாஸ். சிவப்பு, வெள்ளை உடை, தலையில் தொப்பி, முதுகில் பரிசுகள் வைத்திருக்கும் பை ஆகியவற்றுடன் காட்சி தருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. தேவ தூதனான இயேசு கிறிஸ்து பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா? இவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்ற தகவல்களை கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்த சமயத்தில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு கிறிஸ்து அவதரித்த பிறகு 270 வருடங்கள் கழித்து ரோம சாம்ராஜ்யத்தில் லைசியா என்ற ஊரில் பிறந்தவர் தான் நிகோலஸ். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், ஏழை மக்களுக்கு உதவுவதே இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்லும் வழி என கருதி வாழ்ந்து வந்தார். கிறிஸ்தவ இறையியல் பணியே வாழ்வின் நோக்கம் கொண்டு வாழ்ந்த நிகோலஸ், பிஷப் பதவியையும் ஏற்றார். பிஷப் பதவி ஏற்ற பிறகு, டிசம்பர் 06ம் தேதி இரவு வந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் கொடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தார். பழங்கள், சாக்லேட், பொம்மைகள் போன்ற பரிசுகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.
343 ம்ஆண்டு டிசம்பர் 06ம் தேதி நிகோலஸ் மறைந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஏழை மக்களிடம் காட்டிய அன்பு, குழந்தைகள் மீது கொண்ட பாசம் ஆகியவற்றின் காரணமாக பலரது மனதிலும் அவர் நீங்காத இடம்பிடித்தார். செயிண்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாறா் என்று மாறியது. பிறகு ஆங்கிலத்தில் அது சான்டா கிளாஸ் என மாறியது. நிலோலஸ் காலத்தில் பிஷப்கள் அணிந்திருந்த சிவப்பு-வெள்ளை நிற அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகவும் மாறியது. கிறிஸ்தவ மதத்திற்காகவும், இயேசுவின் கருணை மற்றும் அன்பை போதிக்கும் வகையில் நிகோலஸ் செய்த தொண்டுகளை நினைவு கூறும் விதமாக கிறிஸ்துமஸ் சமயத்தில் அவர் பரிசு பொருட்கள் வழங்கிய பாரம்பரிய முறை அவரது நினைவாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் ரோம் பேரரசில் மட்டும் கிறிஸ்துமஸ் சமயங்களில் சாண்டாகிளாஸ் வேடமிட்டு வரும் நபர் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வந்தார். பிறகு மெல்ல மெல்ல இந்த நடைமுறை உலகம் முழுவதும் பரவ துவங்கி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மக்களின் உற்சாகத்தை அதிகரிப்பதற்காக அனைத்து இடங்களிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகை வழக்கமான முறையாக மாறியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}