நெல்லை: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையினால் அங்குள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை ஒய்ந்த பின்னரும். மக்களின் வாழ்க்கை முறை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் வெள்ள பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை ஐந்தாம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா.
உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை தான் தொடர்கிறது. மழை எச்சரிக்கை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு.
வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுது்து வருகிறேன். நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும். மீட்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டுமு். ரூ.6000 வெள்ள நிவாரணம் நிதி நிச்சயம் போதாது என்று பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}