சென்னை: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது 71 வது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிறந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராகவும், 2009 ஆம் ஆண்டு துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார்.
2021 ஆம் ஆண்டு மே, 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் எட்டாவது முதல்வராக பொறுப்பேற்றார்.
முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போது வரை தமிழக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகிறார். பல்வேறு புரட்சிகர திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமல்படுத்தி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது 71 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இதனை அடுத்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்தால் முதல்வர் ஸ்டாலின். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அங்கு தொண்டர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்:
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தனது எக்ஸ் தளத்தில் சமூக நீதி, மகளிர் மேம்பாடு ,தொழில் வளர்ச்சி, என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வருகிறார் முதல்வர். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர் ஸ்டாலின் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரியார் திடலில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தி க தலைவர் கீ.வீரமணி இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இவர்கள் தவிர கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}