சென்னை: பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன் என முதல்வர் மு க ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா(70) உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல் பூர்வீகமான திருச்சி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவிஞர் நந்தலாலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள் முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள், என கலைஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும் அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.
காவிரி கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தனது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீரா காதலுக்கு திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறு நூலே சான்றாகும்.
அவரது ஆற்றல் தமிழ் சமூகத்திற்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கலைஞர் நந்தலாலா அவர்கள். அறிவும் துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்பு போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள் என்றும் உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பரந்த மனதோடும் அன்போடும் வாழ்த்தி பேசியதையும் இவ்வேளையில் நினைவு கூறுகிறேன்.
மேலும் பல்லாண்டுகள் தமிழ் சமூகத்திற்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்து விட்டார் என்பது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கலையும் ஆறுதல்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}