பாடகி பி. சுசீலாவுக்கு டாக்டர் பட்டம்.. வழங்கி.. பாட்டுப் பாடி நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Nov 21, 2023,05:06 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் பிரபல பாடகி பி. சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பி.சுசீலா பாடிய பாடலைப் பாடி அனைவரையும் நெகிழ வைத்தார்.


1935ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் பாடகி பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. தென்னிந்தியாவின் இசைக்குயில், மெல்லிசை அரசி, இசையரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என்றும் அழைக்கப்படுபவர். 




கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது என ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க்பட்டுள்ளது.


இப்பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.  இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 




முதல்வர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.  பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது பி.சுசீலாவைப் புகழ்ந்து பேசினார். மேலும் பி.சுசீலா பாடிய நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்ற பாடலின் சில வரிகளைப் பாடி மகிழ்ந்தார். அவரது பாடலைக் கேட்டு பி.சுசீலாவும் புன்னகை மற்றும் ஆச்சரியத்துடன் முதல்வரைப் பார்த்து மகிழ்ந்தார்.


ஜெயலலிதாவைப் பாராட்டிய மு.க. ஸ்டாலின்




முதல்வர் தனது பேச்சின்போது இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தராக இருக்கிறார். ஆனால் இந்த இசைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவரும் ஜெயலலிதாதான் என்பதால்தான் இன்று பேசும்போது அவரை பாராட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்