கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்

Mar 06, 2023,09:32 AM IST
மதுரை: மனித குலத்தின் தொல்நாகரீக இனமாம் நம் தமிழினித்தின் பழம் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்கியகத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மதுரை அருகே உள்ளது கீழடி கிராமம். சிவகங்கை மாவட்டத்தின் கீழ் வரும்  கீழடியில் நடந்த தொல் பொருள் ஆய்வின்போது மிகப் பெரிய வரலாறு அங்கு புதையுண்டு கிடப்பது தெரிய வந்தது. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தை அடையாளம் போட்டுக் காட்டியது கீழடி அகழாய்வு.

இதுவரை நமக்குக் கிடைத்திராத பல வரலாற்று சான்றுகள் கீழடியில் கிடைத்தன. தமிழ் பிராமி எழுத்துக்கள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள், தாழிகள், காசுகள், அணிகலன்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அங்கு கிடைத்துள்ளன.



மிக மிக தொன்மையான தமிழ் நாகரீகம் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்க கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த திமுக ஆட்சியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டு திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 25 கோடி  செலவில் கட்டுமானப் பணிகள் முடிந்து அருங்காட்சியகம் அருமையாக உருவெடுத்துள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். செட்டி நாட்டு வீடு போன்ற வடிவமைப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 6 காட்சிக் கூடங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னர் கீழடி அகழாய்வுப் பொருட்களுக்கு அருகில் நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தார்.



தனது கீழடி பயணம் தொடர்பாக முதல்வர் தனது முகநூலில் எழுதியிருப்பதாவது:

மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை நான் பெற்றேன்.

ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு.

ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்